×

4 சதவீத அகவிலைப்படி உயர்வு அரசு சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர்), தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்), தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 4 சதவீத அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2587.91 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

The post 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அரசு சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : chief minister ,Chennai ,M.K.Stalin ,Chief Secretariat ,Tamil Nadu ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...