×

காஜூ சிக்கன்

தேவையான பொருட்கள்

முந்திரி – 150 கிராம்
சிக்கன் – 500 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பட்டை – 2
கிராம்பு – 6
ஏலக்காய் – 3
வெங்காயம் – 2
ஜாதி பத்திரி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பாதாம் – 2 டீஸ்பூன்
கசகசா – 50 கிராம்.

செய்முறை

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரிப் பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி ஊற வைத்துள்ள கசகசா இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துப்பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்க்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் பச்சை வாசனை போனபின்பு மல்லித் தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் கொதித்தபின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இரண்டு நிமிடம் கழித்து இறக்கினால் காஜூ சிக்கன் தயார்.

The post காஜூ சிக்கன் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...