×

ஆவின் நிறுவனம் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர் மற்றும் பன்னீர் வகைகளை 10,000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் காலத்திற்கேற்ப மற்றும் பொதுமக்களின் விருப்பத்தை அறிந்து பால் பொருட்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேலும் பொதுமக்களின் தேவையை அறிந்து புதுவகையான பால் உபபொருட்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யினை கடந்த மூன்று மாதங்களாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.50/- தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்த தள்ளுபடியினை மார்ச் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் ஆவின் நெய்யினை தள்ளுபடி விலையில் 31.03.2024 வரை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பனீர் கடந்த மூன்று மாதங்களாக சலுகை விலையில் 200 கிராம் பனீர் ரூபாய் 120 லிருந்து ரூபாய் 10 குறைத்து ரூபாய் 110 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்ததள்ளுபடியினை தொடர்ந்து நீட்டிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஆவின் நிறுவனம் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aavin ,Chennai ,Tamil Nadu ,Milk Producers Network ,Avin ,Dinakaran ,
× RELATED இணையதள வாயிலாக பால் அட்டை பெற...