×

உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, கடந்த பிப்ரவரி 7ம் தேதி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மசோதாவிற்கு, போதுமான எம்எல்ஏக்கள் சம்மதம் தெரிவித்ததால் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா கவர்னர் குர்மித் சிங் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. அவர், ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு கடந்த மாதம் 29ம் தேதி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது உத்தரகாண்ட். இதையடுத்து, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி “உத்தரகாண்ட் மாநில வரலாற்றில் இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்” என தெரிவித்தார். பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் சொத்து உரிமை ஆகியவற்றில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகள் பின்பற்றப்படும்.

The post உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : President ,Dravupati Murmu ,New Delhi ,Uttarakhand ,Chief Minister ,Pushkar Singh Dhami ,Dinakaran ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்