- அரசினர் கல்லூரிகள்
- மற்றும் அறிவியல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- ஆசிரியர் தேர்வு வாரியம்
- கலை மற்றும் அறிவியல் அரசு கல்லூரிகள்
- முதல் அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அரசுக் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மிக விரைவில் வெளியிடவுள்ளது என்று முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.65 துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வரும் 28ம் தேதி முதல் ஏப். 29 வரை உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.