×

திருத்துறைப்பூண்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 14: திருத்துறைப்பூண்டியில் நாடாளுமன்றத் தேர்தல் 2024, நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோர்களை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான தமிழ்மணி துவக்கி வைத்தார்.இதில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரி, தாசில்தார்கார்ல் மார்க்ஸ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன், போலீஸ் எஸ்.ஐ. முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணி தாலுகா அலுவலக வளாகத்தில் துவங்கி நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இதில் ஏராளமோனார் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Voter awareness ,Thiruthurapundi ,Tiruthurapoondi ,Thiruthurapoondi ,Parliamentary Election 2024 ,Thiruthurapoondi Legislative Assembly Constituency ,Voter Awareness Rally ,
× RELATED திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!