×

வேலங்குடி கருப்பர்கோயில் இரண்டாம் நாள் திருவிழா

 

பொன்னமராவதி, மார்ச்14: பொன்னமராவதி அருகேயுள்ள வேலங்குடி கருப்பர்கோயில் இரண்டாம் நாள் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 6ம் தேதி கப்பரையும், 8ம் தேதி சிவராத்திரியும், 10ம்தேதி பாரிவேட்டையும் நடைபெற்றது. 12ம் தேதி முதல்நாள் திருவிழாவும், 13ம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவும் நடைபெற்றது.பல்வேறு இடங்களில் மாபெரும் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலாக அரிவாள் வைப்பதும், குழந்தைபேறு கிடைத்தவர்கள் தொட்டில் கட்டினர். பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து வந்து வழிபட்டனர். இவ்விழாவிற்காக பொன்னமராவதி, திருப்பத்தூர், திருமயம், சிங்கம்புணரி பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கபபட்டது.

The post வேலங்குடி கருப்பர்கோயில் இரண்டாம் நாள் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Velangudi Karupar Temple second day festival ,Ponnamaravati ,Velangudi Karupar Temple ,Kabbar ,Shivratri ,Parivet ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...