×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடதேர்வு எழுதுவதில் விலக்கு

சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக 8ம் வகுப்பு வரை வெளி மாநிலங்களில் படித்துவிட்டு பெற்றோர் பணி நிமித்தமாக தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது தமிழ் மொழிப்பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் பிற மாணவ மாணவியர் தமிழ் மொழிப் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.

இந்நிலையில், சிறுபான்மை மொழி படிக்கும் மாணவ மாணவியர் தமிழ் பாடத் தேர்வு எழுதத் தேவையில்லை. மேலும் சிறுபான்மை மொழியை விருப்பப் பாடமாக எழுதும் மாணவர்களும் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த மதிப்பெண்களும் சான்றிதழில் இடம் பெறும். இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2020 முதல் 2022 வரையில் 3 ஆண்டுகளுக்கு மட்டும் பகுதி 1ன் கீழ் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தீர்ப்பளித்தது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பில் இது 2023ம் ஆண்டுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை மொழி பேசுவோர் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். மேலும், 2025ல் இது குறித்து தமிழ் மொழித் தேர்வு விலக்கு கோரி வழக்கு தொடரமாட்டோம் என்றும் உறுதி அளித்தனர். அதன் பேரில் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு 2023-2024ம் கல்வி ஆண்டுக்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப்பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, சிறுபான்மை மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணையில் தெரிவிக்கப்படுகிறது.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடதேர்வு எழுதுவதில் விலக்கு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamilnadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...