×

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கையை உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் பேருந்து, நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை மாநகரில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்தும் புளிமூட்டைகளைப் போல பயணிகளை அடைத்துச் செல்வதையும், 20க்கும் கூடுதலான மாணவர்கள் படிகளில் தொங்கிக்கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

இதற்குக் காரணம் பயணிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் இயக்கப்படாதது தான். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடங்கும் நேரத்திலும், பணி முடியும் நேரத்திலும் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதன் மூலம் தான் இத்தகைய விபத்துகளை தவிர்க்க முடியும். சென்னையில் 3233 பேருந்துகளுக்கு, 2700க்கும் குறைவாகவும், தமிழ்நாடு முழுவதும் 21,000க்கு 18 ஆயிரத்திற்கும் குறைவாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்.

 

The post தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கையை உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RAMADAS ,TAMIL NADU ,Chennai ,Ramdas ,Bamaka ,Surunagalur ,Madurandam ,Chengalpattu ,CHENNAI MANAGAR ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...