×

கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் 2வது நாளாக ரத்து

காஞ்சிபுரம், மார்ச் 14:காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட 51 வார்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை தீர்மானமாக கொண்டு வந்து மாதந்தோறும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில், தீர்மானம் நிறைவேற்றி பணிகள் துவங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்திற்கான சாதாரண கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கம் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், கவுன்சிலர்களை உரிய மரியாதை தருவதில்லை எனவும், முக்கிய திட்ட பணிகளை கவுன்சிலரில் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக காரணம் காட்டி திமுக கவுன்சிலர்கள் உட்பட அதிமுக பாஜ உள்ளிட்ட 36 கவுன்சிலர்கள் கூட்டத்தினை புறக்கணிப்பு செய்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2ம் நாள் கூட்டத்தில் மேயர் மகாலட்சுமிக்கு ஆதரவாக 13 கவுன்சிலர் மட்டுமே இருந்ததால் கூட்டத்தை நடத்த குறைந்தது 17 கவுன்சிலர்கள் இருக்க வேண்டும் என்பதால், நிர்வாக காரணமாக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து 2ம் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேயர் மகாலட்சுமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வரும்நிலையில், 2வது நாளாக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The post கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் 2வது நாளாக ரத்து appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Corporation ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவ, மாணவிகள் காயம்