×
Saravana Stores

விவசாய நிலங்களில் 3 காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியை ஒட்டிய

பேரணாம்பட்டு, மார்ச்14: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் 3 காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் செய்ததால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி குண்டலபல்லி ரங்கம்பேட்டை சாரங்கல் அரவாட்லா பாஸ்மார்பெண்டா டி.டி. மோட்டூர் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருவது தொடர்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பத்தலபல்லி கிராமத்தைச் சேர்ந்த குமார், வெங்கடேசன் ஆகியோரின் விவசாய நிலத்தில் 3 காட்டு யானைகள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மிதித்தும், சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளது.

யானைகளின் பிளிறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விவசாயிகள் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி 3 காட்டு யானைகளையும் பானங்கள் விட்டும், பட்டாசுகள் வெடித்தும், டார்ச் லைட் அடித்தும் கூச்சலிட்டு அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர். காலை 6 மணியளவில் பேரணாம்பட்டு வன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் வணவர் இளையராஜா மற்றும் வனத்துறையினர், வருவாய் துறையினர் வந்து காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களை பார்வையிட்டனர். அப்போது, தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானைகள் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, சோலார் மின்வேலி, யானை குழிகள், தடுப்பு சுவர்கள் போன்றவைகள் அமைத்து தர வேண்டும் எனவும், கும்கி யானைகள் வைத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

The post விவசாய நிலங்களில் 3 காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியை ஒட்டிய appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Vellore District ,Pathalappalli ,Kundalapally ,Rangampet ,Sarangal ,Aravadla ,Pasmarbenda… ,Dinakaran ,
× RELATED பேரணாம்பட்டு அருகே அதிகாலை சோகம்...