விகேபுரம், மார்ச் 14: இசக்கி சுப்பையா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: பாபநாசம் அணையில் இருந்து தற்போது தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது அறுவடை முடிந்த நிலையில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது தேவையற்றது. தற்போது குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் தேவை உள்ளது. இதனால் கார் பருவ சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவர். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆதலால் விவசாயிகளின் நலன் கருதி தண்ணீரின் அளவை குறைத்து திறந்து விடும் படி அரச அதிகாரிகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும் appeared first on Dinakaran.