×

பிச்சை காசு என கூறிய குஷ்புக்கு விஜயதரணி எதிர்ப்பு: பாஜ பதவி கொடுப்பாங்கனு நம்பிக்கையாம்…

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். அதன்பிறகு முதல் முறையாக நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட பாஜ கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் விஜயதரணி கூறியதாவது:
பாஜவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். எனக்கு உரிய மரியாதை தருவார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பாஜவில் இணைந்ததில் சுயநலம் இல்லை. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பாஜவில் இணைந்துள்ளேன்.

விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள். ஆனால் நான் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன். தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரவேற்கிறேன். பெண்களுக்கான திட்டங்கள் எது வேண்டுமானாலும் வரவேற்க கூடியது தான். ஆனால் மகளிர் உரிமை தொகையை எல்லா பெண்களுக்கும் வழங்க வேண்டும். மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு என, குஷ்பு கூறியது பற்றி எனக்கு தெரியாது. எந்த அர்த்தத்தில் அவர் கூறினார் என்பது தெரியவில்லை. அவரிடம் கேட்டால் தான் அது பற்றி தெரிந்து கொள்ள முடியும். அவரது பேட்டியை நான் முழுமையாக பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை, தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் எல்லா பெண்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பிச்சை காசு என கூறிய குஷ்புக்கு விஜயதரணி எதிர்ப்பு: பாஜ பதவி கொடுப்பாங்கனு நம்பிக்கையாம்… appeared first on Dinakaran.

Tags : Vijayatharani ,Khushbu ,BJP ,Kumari District Vilavankode ,Assembly ,Constituency ,Former ,MLA ,Congress party ,Kumari district ,Nagercoil ,Kushpu ,Dinakaran ,
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...