×

போதை பொருளுக்கு எதிராக பிரசாரம் குஜராத்தில்தான் முதலில் செய்யணும்: அண்ணாமலைக்கு அமைச்சர் நெத்தியடி

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு சாலைபணிகள் மற்றும் அரசு திட்டங்களை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். ஆற்றூரில் நிருபர்களிடம் அவர் கூறியது: போதை பொருளின் உற்பத்தி இடமே குஜராத் தான். நேற்று மட்டும் 480 கோடி ரூபாய்க்கு போதை பொருட்கள் குஜராத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடி போதைபொருட்கள் குஜராத்தில் குறிப்பாக அதானி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. பிடித்த போதை பொருட்கள் என்ன ஆனது என தெரியவில்லை. அண்ணாமலை போதைக்கு எதிராக பிரசாரம் செய்யவேண்டியது குஜராத்தில் தான்.

இதனால் எந்த பலனுமில்லை. மோடி தலைமையிலான பாஜ அரசு துறைமுகம், விமானநிலையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்த்ததால் போதை பொருட்கள்கள் போன்று என்ன பொருட்கள் எல்லாம் வட இந்தியா மற்றும் ஆப்கான் நாட்டில் இருந்து கொண்டு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. நொந்துபோன கூட்டமெல்லாம் பாஜவுடன் சேர்ந்துள்ளது. பிரதமர் தைரியமாக நான் இதை செய்துள்ளேன் எனக்கு வாக்களியுங்கள் என கேட்க வேண்டும். அதைவிடுத்து மக்களிடம் 16 வயது முதல் வீட்டை விட்டு வெளியேறினேன் என கூறுவது மாணவர் பருவத்தில் இருப்பவர்கள் மனதில் என்ன தோன்றும்?. இவ்வாறு அவர் கூறினார்.

The post போதை பொருளுக்கு எதிராக பிரசாரம் குஜராத்தில்தான் முதலில் செய்யணும்: அண்ணாமலைக்கு அமைச்சர் நெத்தியடி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Minister Nethiadi ,Tamil ,Nadu ,Dairy ,Minister ,Manothangaraj ,Kulasekaram ,Thiruvatar ,Kanyakumari district ,Tiyoor ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...