×

நாடு முழுவதும் 23 வகை நாய்களை வளர்க்க தடை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: வளர்ப்பு நாய்கள் தாக்கி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலர், மாஸ்டிப் உள்ளிட்ட 23 வகையான கொடூர நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட இந்த இன நாய்களை மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க கருத்தடை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போயர்போல் கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய தோசா, அகிதா, மாஸ்டிப்ஸ், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ, பந்தோக் ஆகியவை தடை செய்யப்பட்ட நாய்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

The post நாடு முழுவதும் 23 வகை நாய்களை வளர்க்க தடை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union govt ,New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை