×

அமெரிக்காவில் சட்டம் படிக்க செல்லும் உச்ச நீதிமன்ற கேன்டீன் சமையல்காரர் மகளுக்கு பாராட்டு: தலைமை நீதிபதி பரிசு வழங்கினார்

புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டம் படிக்கும் செல்லும் உச்ச நீதிமன்ற கேன்டீன் சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவர் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்டமேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதற்காக உதவித்தொகை கிடைத்துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அமெரிக்காவில் மிக்சிகன், கலிபோர்னியா ஆகிய 2 பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு கிடைக்க உதவித்தொகை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மாணவி பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் இந்திய அரசியல் சட்டம் தொடர்பான 3 புத்தகங்களில் கையெழுத்து போட்டு மாணவி பிரக்யாவுக்கு அவர் பரிசாக வழங்கி, ‘ அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு தாய்நாட்டிற்கு வந்து மீண்டும் சேவை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

The post அமெரிக்காவில் சட்டம் படிக்க செல்லும் உச்ச நீதிமன்ற கேன்டீன் சமையல்காரர் மகளுக்கு பாராட்டு: தலைமை நீதிபதி பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,United States ,Chief Justice ,NEW DELHI ,Pragya ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...