×

டெஸ்ட் பவுலிங் தரவரிசை 6வது முறையாக அஷ்வின் நம்பர் 1

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் இந்திய சுழல் நட்சத்திரம் ஆர்.அஷ்வின் 6வது முறையாக முதலிடத்துக்கு முன்னேறி முத்திரை பதித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடந்த 5வது மற்றும் கடைசி டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் கைப்பற்றிய அஷ்வின் 870 புள்ளிகளுடன் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி உள்ளார். டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் அவர் முதலிடத்துக்கு முன்னேறுவது இது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய வேகம் ஜோஷ் ஹேசல்வுட் (847), இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா (847) 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (834), ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (820) டாப் 5ல் உள்ளனர். இந்திய சுழல் குல்தீப் யாதவ் ஒரேயடியாக 15 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 16வது இடத்தை பிடித்துள்ளார். ஜடேஜா (788) 7வது இடத்தில் உள்ளார்.

விக்கெட் வேட்டை டாப் 10
எண் வீரர் புள்ளி
1 ஆர்.அஷ்வின் (இந்தியா) 870
2 ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.) 847
2 ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) 847
4 காகிசோ ரபாடா (தெ.ஆப்.) 834
5 பேட் கம்மின்ஸ் (ஆஸி.) 820
6 நாதன் லயன் (ஆஸி.) 801
7 ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 788
8 பிரபாத் ஜெயசூரியா (இலங்கை) 783
9 ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) 739
10 ஷாகீன் அப்ரிடி (பாகிஸ்தான்) 733

The post டெஸ்ட் பவுலிங் தரவரிசை 6வது முறையாக அஷ்வின் நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Dubai ,R. Ashwin ,ICC ,England ,Dharamsala ,Dinakaran ,
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...