×

வரி பாக்கி விவகாரம்: காங். மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

புதுடெல்லி: கடந்த 2018-19ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.100 கோடிக்கும் அதிகமான வரி பாக்கி செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரி பாக்கியை வசூலிப்பதற்காக கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை கடந்த மாதம் 13ம் தேதி முடக்கி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடியது. ஆனால், தீர்ப்பாயம் காங்கிரசின் கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா மற்றும் புருஷைந்திர குமார் ஆகியோர் கொண்ட அமர்வு மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தது.

The post வரி பாக்கி விவகாரம்: காங். மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi Eicourt ,NEW DELHI ,PAKHI ,Income Tax Department ,Kong ,Delhi Court ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு