×

‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3ம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில் 2023க்கான விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது ரூ.5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழும் அடங்கும். விருதிற்கான தகுதிகள்: விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும். பத்திரிகை பணியை முழுநேர பணியாக கொண்டிருக்க வேண்டும்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விருதாளர் தேர்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். குழுவின் முடிவே இறுதியானது. ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமை செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு ஏப்.க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

 

The post ‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,CHENNAI ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...