×

கோவையில் இருந்து சேலம் வழியே ராஜஸ்தானுக்கு ஹோலி சிறப்பு ரயில்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சேலம்: கோவையில் இருந்து சேலம் வழியே ராஜஸ்தானுக்கு ஹோலி பண்டிகை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வடமாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலி பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தென் மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்தவகையில், கோவையில் இருந்து ஈரோடு, சேலம் வழியே ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி ஸ்டேஷனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, கோவை-பகத் கி கோதி சிறப்பு ரயில் (06181) நாளை (14ம் தேதி) முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் (4 சேவை) இயக்கப்படுகிறது. கோவையில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூருக்கு அதிகாலை 3.13க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 4.05க்கும், சேலத்திற்கு அதிகாலை 5.15க்கும் வந்து, ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சக்குடா, நான்டெட், சூரத், அகமதாபாத் வழியே பகத் கி கோதிக்கு சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், பகத் கி கோதி-கோவை சிறப்பு ரயில் (06182) வரும் 17ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை ஞாயிறு தோறும் (4 சேவை) இயக்கப்படுகிறது. பகத் கி கோதியில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு புதன்கிழமை அதிகாலை 5.12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், ஈரோட்டிற்கு காலை 6.20க்கும், திருப்பூருக்கு காலை 7.03க்கும் சென்று கோவையை காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post கோவையில் இருந்து சேலம் வழியே ராஜஸ்தானுக்கு ஹோலி சிறப்பு ரயில்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Rajasthan ,Salem ,Railway Administration ,administration ,Holi ,northern states ,southern ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்