×

குடியுரிமைத் திருத்த சட்டம்.. தேர்தல் நேரத்தில் அமல்படுத்தியது ஏன்?: காங். ஜெயராம் ரமேஷ் கண்டனம்..!!

டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே பாரத ஜனதா அரசு குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ்; குடியுரிமைத் திருத்த சட்டம் இயற்றப்பட்டு 4 வருடங்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் அதனை ஒன்றிய அரசு அமல்படுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பாரதிய ஜனதா அரசின் பாதகங்களை மக்கள் பார்வையில் இருந்து மறைப்பதற்காகவே குடியுரிமைத் திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக ஜெயராம் ரமேஷ் கூறினார்.

இதனிடையே டெல்லியில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியர்களின் வரிப் பணத்தை புதிதாக குடியுரிமை பெறும் லட்சக்கணக்கானவர்களுக்கு வீடுகளை கட்டவும், வேலை வழங்கவும் ஒன்றிய அரசு பயன்படுத்த இருப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்தி இருப்பதற்கு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு மதங்களுக்கு இடையே பாகுபாட்டை உருவாக்கி சண்டை மற்றும் கலவரத்தை உருவாக்க நினைப்பதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

 

The post குடியுரிமைத் திருத்த சட்டம்.. தேர்தல் நேரத்தில் அமல்படுத்தியது ஏன்?: காங். ஜெயராம் ரமேஷ் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Jayaram Ramesh ,Delhi ,Congress ,BJP ,General Secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED 2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா