×

உதகையில் மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர் உயிரிழந்த சம்பவத்தில் நிலத்தின் உரிமையாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் கைது

நீலகிரி: உதகையில் மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர் உயிரிழந்த சம்பவத்தில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதகை மரவியல் பூங்கா அருகே கட்டிடப் பணிக்காக மண் அகற்றும் பணியின்போது விபத்து ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் கட்டிடத்துக்கான கட்டுமான பணி வழக்கம் போல் இன்று காலை நடைபெற்று வந்தது. கட்டுமான பணியில் 4 வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகில் பள்ளம் தோண்டிய போது அருகில் உள்ள சுவர் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மண் சரிவில் சிக்கிய இருவரை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதில் மண்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளி ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளி ஜாகீர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் மேத்யூஸ் மற்றும் மேற்பார்வையாளர் நாசருல்லா ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உதகையில் மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர் உயிரிழந்த சம்பவத்தில் நிலத்தின் உரிமையாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் கைது appeared first on Dinakaran.

Tags : Udaka ,Nilgiri ,Udakai Arboretum Park ,Nilgiri District ,Udagai ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...