×

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு: 1768 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

சென்னை: தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சேர நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரிய தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் – 2024ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2024, நாள் 09.02.2024 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய காடசி தேதி 15.03.2024 லிருந்து 20.03.2024 மலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் (Edit Option) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியத்தின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 2103.2004 முதல் 23.03.2024 மலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் தங்களதுரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தாடன். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ச பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட உறுதி செய்கண்டும் அக்காறு செய்லில்லைல் செய்யப்பட்ட ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள சமர்ப்பி என்ற பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

கடைசியாக உள்ள சமர்ப்பி (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அன்னாரின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் மாறன்களை செய்து விண்ணப்பத்தை சமர்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் (Edit Option) மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (Panel) உரிய திருத்தம் மேற்கொண்டபின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் (Fileds) திருத்தம் செய்யும்பொழுது மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் எற்படும்.

திருத்தம் (Edit Option) செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கைபேசி எண் (Mobile No.), மின்னஞ்சல் முகவரி (E-mail ID) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.

இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத்தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.

மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டது என தெரிவிக்கப்படுகிறது.

The post இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு: 1768 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Teacher Selection Board ,Tamil Nadu ,Selection Board ,Dinakaran ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணி ஜூனில் தேர்வு...