×

ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தினாலும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில், திருக்கோயில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு உழவார உபகரணங்கள் வழங்கி உழவாரப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து உபகரணங்களை வழங்கினார். விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புபணி அலுவலர் குமரகுபரன், ஆணையர் முரளிதரன், இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகாதேவி, திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ”தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை யில் திருக்கோயில்களை பாதுகாப்பது, திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துவது, கோயில்களை தூய்மையாக பராமரிப்பது, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி ஏற்படுத்தி தருவது என 33 மாதங்களில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை தனது மதிநுட்பத்தால் செயல்படுத்தி வருகிறார்.

சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அந்த வகையில் நம்முடைய உழவாரப்பணி என்பது தொன்று தொட்டு மக்கள் செய்து வருகின்ற பணி என்றாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் சீத்தனஞ்சேரியில் 2022ம் ஆண்டு தங்களுடைய நூறாவது உழவார பணியை மேற்கொண்டனர். அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் என் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களுடைய பணி தொடர்ந்து அரக் கோணத்தில் ஏப்ரல் மாதம் 124வது உழவார பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இதுபோன்ற பக்தர்களால் மேற்கொள்ளப்படுகின்ற உழவாரப்பணிக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு மண்டல இணை ஆணையர்களுக்கு தலா ஐந்து கோயில்களுக்கு உழவாரப்பணி மேற்கொள்வதற்கு உண்டான 12 வகையான உபகரணங்கள் கட்டணமில்லாமல் வழங்கி வருகிறோம். உழவாரப்பணி முடிந்தவுடன் உபகரணங்களை திருக்கோயிலில் ஒப்படைத்துவிடவேண்டும். உழவாரப்பணி மேற்கொள்பவர்களுக்கு முதலமைச்சர் அந்தந்ததுறை சார்பில் இணை ஆணையாளர்கள் சான்றிதழ்களை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை மீட்பதில் தனி முத்திரையை திராவிட மாடல் அரசு பதித்திருக்கிறது. இதற்காக 38 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு வட்டாட்சியர்களை பணிநியமனம் செய்திருக்கிறோம். இவர்கள் இதுவரை ₹5979 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளனர்.

குடமுழுக்கு என்று பார்த்தால் இதுவரை 1477 நடைபெற்றுள்ளன. ஆதிதிராவிடர் வசிக்கிற பகுதியில் 5000 கோயில்களுக்கு திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 2500 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருக்கோயில்களை பாதுகாக்கவும், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு 4000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது.

4000 கோயில்களுக்கு தேவையான நிதி 70 கோடி ரூபாய் அரசே மானியமாக வழங்கி அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 16000 பேருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற ஒரே அரசு தமிழக அரசு. தமிழக அரசு வரலாற்றில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்தாலும் ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தி னாலும் எதற்கும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக. அதனுடைய தலைவர் இரும்பு மனிதர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தினாலும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,CBI ,Minister ,P. K. Sakharbapu ,Dharippakkam ,Thiruvanmiur Hanishwarar Temple ,Minister of ,Hindu ,Religious Affairs ,P. K. Sekarbabu ,CPI ,B. K. ,Sekarbapu ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...