×

கடலூர், விழுப்புரம் கோட்டத்தில் 59 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

கடலூர்: கடலூரில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 7 புதிய பேருந்துகளும் விழுப்புரம் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 52 புதிய பேருந்துகளும் துவக்கி வைக்கப்பட்டது. இதன்படி; கடலூர்-கிளாம்பாக்கம், காட்டுமன்னார்கோயில் – கிளாம்பாக்கம், சிதம்பரம்- சென்னை (கோயம்பேடு) வழி: கிழக்கு கடற்கரைச்சாலை, காட்டுமன்னார்கோயில் -கும்பகோணம்-கிளாம்பாக்கம், விருத்தாசலம் – கிளாம்பாக்கம், விருத்தாசலம் – பெங்களூரு, திட்டக்குடி – கிளாம்பாக்கம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் 25 ஆண்டுகள் விபத்தின்றி பணிபுரிந்த 2 ஓட்டுனர்களுக்கு தங்கப் பரிசு வழங்கப்பட்டது. 10 ஆண்டுகள் விபத்தின்றி பணிபுரிந்த 218 ஓட்டுனர்களுக்கு வெள்ளிப் பரிசு வழங்கப்பட்டது. பணிக்காலத்தில் இறந்த 17 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 46 பணியாளர்களுக்கு காலமுறை பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகளை இயக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகர செயலாளர் ராஜா மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கடலூர், விழுப்புரம் கோட்டத்தில் 59 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore, Villupuram ,Cuddalore ,Cuddalore district ,Villupuram ,Tamil Nadu Government Transport Corporation (Villupuram) Ltd ,Cuddalore-Klampakkam ,Kattumannarkoil ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை