×

மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சை பேச்சு நெல்லையில் குஷ்பு உருவபொம்மை திமுகவினர் எரிப்பு

நெல்லை : தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சையாக பேசிய பாஜ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து நெல்லையில் அவரது உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர்.தமிழக அரசு சார்பில் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை அளிக்கிறது என பாஜ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர், குஷ்பு உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் திரண்ட திமுகவினர் குஷ்பு உருவபொம்மையை இழுத்து வந்து தீயிட்டு எரிக்க முயன்றனர். நடிகை குஷ்பு உருவ பொம்மையை மகளிர் அணியினர் துடைப்பத்தால் அடித்து போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உருவ பொம்மையை பறித்துச்சென்றனர்.

இதில் மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாவட்ட துணை செயலாளர்கள் தர்மன், கிரிஜாகுமார், கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தலைவர் விஜிலா சத்யானந்த், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேஸ்வரி, மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் அனிதா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான், கவுன்சிலர்கள் சகாய ஜூலியட் மேரி, ராஜேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் ராஜகுமாரி, பேரங்காடி ஐயப்பன், மற்றும் மத்திய மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை டவுன் வாகையடி முனையில் மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி தலைமையில் திரண்ட திமுகவினர் குஷ்புவின் உருவபொம்மையை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு, மாநகர துணை செயலாளர் அப்துல் கையூம், பகுதி அவைத் தலைவர் சுப்பையா, பொருளாளர் பாஸ்கர், 25வது வட்ட செயலாளர் சுந்தர் ராஜ் (எ)அருள், வட்ட செயலாளர்கள் மாரிமுத்து, காஜா மைதீன், மகளிர் அணியினர் பத்மா, மேரி உலகராஜ், பிந்து செய்யது, ராஜேஷ்வரி, ஆனி ரேக்லண்ட், ஷெர்லி, சுப்புலெட்சுமி, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் மாநகர நிர்வாகிகள் நாதன், ஜவகர், வேங்கை வெங்கடேஷ், சுரேஷ் குமார், ஷெட்டி, முருகன், நச்சினார் இனியன், வைரமணி, சிவா, சார்லஸ், சித்திக், ஆறுமுகம், மகாராஜன், செந்தில் குமார், கணேச பெருமாள், ராமச்சந்திரன், வெங்கடேஷ், ராஜா அப்பாஸ், சாதிக், மில் குமார், ஹாமிம் முஸ்தபா, சேக், டைட்டஸ் கண்ணன், உலகநாதன், ராமசாமி, சேக், சாதிக், சங்கர், சங்கர நாராயணன், சாலமோன், சுரேஷ், அக்பர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சை பேச்சு நெல்லையில் குஷ்பு உருவபொம்மை திமுகவினர் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Kushpu ,Nellai ,Khushpu ,National Commission for Women ,Tamil Nadu government ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில்...