×

தோகைமலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்

 

தோகைமலை, மார்ச் 13: தோகைமலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பழுதாகி கழிவு நீர் வடிகாலில் குடிநீர் கலந்து வருவதால் சேதமான குழாயை சரி செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதி மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து தோகைமலை வழியாக குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேலான கிராமங்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த குடிநீர் குளாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் குடிநீர் வீணாகி வருகிறது. இந்நிலையில் குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் தோகைமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள நான்கு சக்கர வாகங்கள் நிறுத்தும் மையத்தின் அரகே காவிரி கூட்டுக்குடிநீர் குளாய் சேதமாகி உள்ளது. குடந்த 6 மாதங்களாக சேதமான குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரானது, அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் கலந்து வருகிறது. கடந்த 6 மாதமாக சேதமான காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து அதிகமான தண்ணீர் வீணாகி வருவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியை ஆய்வு செய்து உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைத்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தோகைமலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tokaimalai ,Thokaimalai ,Cauvery ,Trichy District Manaparai ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு