×

பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்குழாய் அமைக்க இடம் தேர்வு பணி தீவிரம்

 

தோகைமலை, மார்ச் 13: பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்குழாய் அமைக்க இடம் தேர்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கடவூர் ஒன்றியத்தில் நீர்வள ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.கோடை கோலம் தொடங்கி உள்ளதால், கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக, அனைத்து கிராமங்களுக்கும் தங்குதடையின்றி குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று, கடவூர் ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் பேசினார். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒன்றிய ஆணையர்களுக்கு பரிந்துரையும் செய்து இருந்தார். ஒன்றிய ஆணையர்கள் அறிக்கை அனுப்பி இருந்தனர்.மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவை அடுத்து கடவூர் ஒன்றியத்தல் உள்ள பாப்பையம்பாடி, வடவம்பாடி, மஞ்சாநாயக்கன்பட்டி, வரவனை, தென்னிலை, பண்ணப்பட்டி, வெள்ளப்பட்டி, கீரனூர், வாழ்வார்மங்களம், கீழப்பகுதி, மேலப்பகுதி, தேவர்மலை, காளையப்பட்டி, ஆதனூர், செம்பியந்த்தம், தரகம்பட்டி, மாவத்தூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர் ஆகிய 20 ஊராட்சிகளில் கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷ் தலைமையில் நீர்வள ஆய்வாளர்களை கொண்டு ஆழ்குழாய் கிணறுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் அமைக்கப்பட்டு உள்ள அனைத்து ஆழ்குழாய் கிணறுகளை ஆய்வு செய்து அதில் தண்ணீர் இருப்புகளை கணக்கீடு செய்கின்றனர். கோடைகாலங்களில் கிடைக்கும் வரை தண்ணீர் போதுமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்து பற்றாக்குறையாக உள்ள ஆழ்துளை கிணறுகளை மீண்டும் ஆழப்படுத்துவதற்கு கணக்கீடு செய்கின்றனர். இதேபோல் தண்ணீர் இருந்தும் அடைப்பு உள்ள ஆழ்குழாய் கிணறுகளை கண்ணீடு செய்து அதனை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். மேலும் ஆழ்குழாய் கிணறுகள் குறைவாக உள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. நிதி பற்றாக்குறையாக உள்ள ஊராட்சிகளை கணக்கீடு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளில் ஒன்றிய ஆணையர் சுரேஷ், ஒன்றிய பொறியாளர்கள் கிருஷ்ணன், ஜெகதீசன் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி துணை தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

The post பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்குழாய் அமைக்க இடம் தேர்வு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Kadavur ,Union ,Kodai Kolam ,Kadavur Union ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...