சாத்தூர், மார்ச் 13: சாத்தூரில் பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் சின்டெக்ஸ் டேங்கை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு பகுதியில் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்குவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு ஓரங்களில் மின் மோட்டார் மூலம் சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கப்பட்டன.
ஆனால் குருலிங்காபுரம் முதல் தெருவில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் பல ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் எடுப்பதற்கு பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. எனவே பழுதடைந்த சின்டெக்ஸ் டேங்கினை விரைவில் சரிசெய்து தரும்படி அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்: சாத்தூர் மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.