×

அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

 

அவிநாசி, மார்ச் 13: அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் பத்திரத்தை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடக்கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பிரமுகர்களிடம் நிதி பெற்று வந்தனர். இதனை ரத்து செய்ய கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், தேர்தல் பத்திரம் ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும், தேர்தல் பத்திரம் எந்தெந்த கட்சிகள் நன்கொடையாக பெறப்பட்டது என்ற விபரங்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதற்கு பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டது. இதனைக்கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, அவிநாசி பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கனகராஜ் தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கோரிக்கைகளை விளக்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, மாதர் சங்கத் தலைவர் செயலாளர் சித்ரா, செல்வி, சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist Communism ,Avinasi ,Marxist Communist Party ,State Bank of India ,Avinashiil Marxist Commune ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...