×

கோவை ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ விற்பனையகம்

 

கோவை, மார்ச் 13: கோவை ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ விற்பனையகத்தை பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். கோவை ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ விற்பனையக துவக்க விழா நடந்தது. இந்த விற்பனையகத்தை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை ரயில் நிலைய இயக்குனர் பவன்குமார் வர்மா தலைமை வகித்தார். டிவிசன் நிலைய பாதுகாப்பு ஆணையர் நவீன் முன்னிலை வகித்தார். அப்போது அவர்கள் கூறியதாவது: ரயில்வேயை நவீனப்படுத்தும் திட்டமாக உள்ளூர் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய தின்பண்டங்கள், பிஸ்கெட், முறுக்கு உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் பயணிகள் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கும், அதனை தயாரிக்கும் கைவினைஞர்களின் மேம்பாட்டுக்கும் வசதியாக இந்த விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு இது போன்று ஒரு நிலையம் என, நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் இந்த விற்பனையகத்தை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவை ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ விற்பனையகம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore railway station ,Coimbatore ,Modi ,Station ,Gujarat ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்