வேலூர், மார்ச் 13: இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேர பொதுநுழைவுத்தேர்வுக்கு அதற்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வௌியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:2024-2025ம் ஆண்டிற்கு இந்திய ராணுவத்திற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் அக்னிவீரர்களாக சேர்ந்திட பொது நுழைவுத்தேர்வுக்கான பெயர்ப்பதிவை www.indianarmy.nic.in என்ற இணையதள முகவரியில், 22.03.2024 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளம் மூலம் தேர்வு 22.04.2024 முதல் நடைபெறுகிறது. எனவே, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அக்னி வீரர்களாக சேர நுழைவுத்தேர்வு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு இந்திய ராணுவத்தில் appeared first on Dinakaran.