×

இணைய தளம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தங்களை இணைத்து கொள்ளலாம்: மாவட்ட உதவி ஆணையர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் செண்பகராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஸ்விக்கி, சொமெட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ‘கிக்’ தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் ‘கிக்’ தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி ‘கிக்’ தொழிலாளர்கள் இணையதளம் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்து வாரியத்தால் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெறலாம். வாரியத்தில் பதிவு செய்ய விரும்பும் ‘கிக்’ தொழிலாளர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், இத்தொழிலாளர்கள் தங்களுடைய நிறுவனங்களிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மூலம் வழங்கப்படும் பணி www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் GIGW என்ற பணிக்குறியீட்டின் கீழ் பதிவு செய்துக்கொள்ளலாம்.

பதிவுபெற்ற ‘கிக்’ தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன் 60 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு மாத ஓய்வூதியமும் நலத்திட்ட உதவியாக வழங்கப்படுகிறது. எனவே, ‘கிக்’ தொழிலாளர்கள் நல வாரியத்தின் பதிவு செய்து பலன்களை பெற்று பயனடையலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளம், அறை எண்.9ல் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரடியாகவும் அல்லது 044-2742 6500 என்ற தொலைபேசி முலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

The post இணைய தளம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தங்களை இணைத்து கொள்ளலாம்: மாவட்ட உதவி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Workers' Welfare Board ,Chengalpattu ,District ,Assistant Labor Commissioner ,Chenbakaraman ,Kik ,Swiggy ,Someto ,Dunso ,Independence Day ,District Assistant Commissioner ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!