×

சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட தி பிளாக் ஹில் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்.

The post சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kannayan Dakshinamurthy ,Chennai ,M.K.Stalin ,Kannaiyan Dakshinamurthy ,M.K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...