×

திருப்போரூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருப்போரூர்: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்போரூர் நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 3 ஆண்டுகால திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்போரூரில் நடந்தது. இதில், பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பரசுராமன் வரவேற்றார். நகர நிர்வாகிகள் அஸ்கர் அலி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, செங்கை தாமஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு, ரூ.5 லட்சம் மதிப்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கவுரிசங்கர், செல்வம், செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், இளைஞர் அணி அமைப்பாளர் பாலு நன்றி கூறினார்.

The post திருப்போரூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Tirupporur ,DMK ,Chief Minister ,Tamil ,Nadu ,M.K.Stal ,Municipal Council ,Devaraj ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...