கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சி மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. இதில், சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மர்ம நபர்கள் அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், ஆகிய பல்வேறு பொருட்களை திருடிச் சென்று விடுகின்றனர். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் நேற்று கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியோசத்தி மற்றும் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
இதில் காவல் துணை கண்காணிப்பாளர் கிரியோசத்தி பேசுகையில், வெளியே செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். வீட்டில் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி மற்றும் ரொக்க பணத்தை பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்க வேண்டும். பெண்கள் ஆட்டோவில் தனியாக செல்லும்போது ஆட்டோ வழி மாறிச் சென்றால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து நபர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
The post கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.