- நித்ன் கட்காரி
- உத்தவ் தாக்கரே
- மகா
- புது தில்லி
- யூனியன் சாலைப் போக்குவரத்து
- அமைச்சர்
- மக்களவைத் தேர்தல்
- பாஜக
- சிவசேனா
- யுபிடி
- ஜனாதிபதி
- மகா விகாஸ் அகாதி
புதுடெல்லி: கடந்த வாரம் பாஜ வெளியிட்ட மக்களவை தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ‘‘மகாராஷ்டிராவில் கட்கரி தனது தைரியத்தை காட்ட வேண்டும், டெல்லி முன் தலைவணங்குவதற்கு பதிலாக ராஜினாமா செய்யுங்கள்.
மகா விகாஸ் அகாடிக்கு வாருங்கள், எம்விஏ வேட்பாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறியிருந்தார். உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கள் கேலிக்குரியது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘தாக்கரேவின் கருத்து முதிர்ச்சியற்றது மற்றும் கேலிக்குரியது. பாஜவில் வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் முறை உள்ளது. சிவசேனா தலைவர் பாஜ தலைவர்களை குறித்து கவலைப்பட தேவையில்லை” என்றார்.
The post மகா விகாஸ் அகாடியில் சேர உத்தவ் தாக்கரே அழைப்பு நிதின் கட்கரி பதில் appeared first on Dinakaran.