×

குஜராத்தில் ரூ.480 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 6 பாகிஸ்தானியர்கள் கைது

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவுக்கு குஜராத் வழியாக போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. போர்பந்தர் துறைமுகம் அருகே கடந்த பிப்ரவரி 26ம் தேதி படகு ஒன்றில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வௌிநாட்டினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் போர்பந்தர் துறைமுகத்துக்கு வரும் படகு ஒன்றில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பணியகம், இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து போர்பந்தர் துறைமுகம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு படகை சோதனையிட்டபோது, அதில் 60 பாக்கெட்டுகளில் சுமார் 80 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.480 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையும், படகையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குஜராத்தில் கடந்த 30 நாட்களில் 2வது முறையாக பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் ரு.3135 கோடி மதிப்புள்ள போதை பொருள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post குஜராத்தில் ரூ.480 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 6 பாகிஸ்தானியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Ahmedabad ,Pakistanis ,India ,Borbandar ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...