×

இ-சேவை மையம் மூலம் LLR விண்ணப்பிக்கலாம்: போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை: எல்.எல்.ஆர். பெற இனி இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவித்துள்ளார். 55,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர். விண்ணப்பிக்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் (LLR) பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும். எல்.எல்.ஆர். பெற பயிற்சிப்பள்ளி, இடைத்தரகர்களை மக்கள் அணுகுவதில் உள்ள சிரமம் கருதி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

The post இ-சேவை மையம் மூலம் LLR விண்ணப்பிக்கலாம்: போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department ,Chennai ,L.L.R. ,LLR ,Dinakaran ,
× RELATED பள்ளிகள், விடுதிகளில் மாணவர்களுக்கு...