×

ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர், பேட்டராக களமிறங்குவார்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் சிகிச்சை பெற்றுக் கொண்டு ரிஷப் பண்ட் ஓய்வில் இருந்தார்.

இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்ட், டிசம்பர் 2022ல் நடந்த பயங்கர கார் விபத்தில் பலத்த காயம் அடைந்ததால் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி, ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய சர்வதேச போட்டிகளை அவர் தவறவிட்டார்.

இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்னும் 10 நாட்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஓங்கியிருந்தது. ‘ரிஷப் சரியாக விளையாடுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் உடற்தகுதி குறித்தும், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பது குறித்தும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் பண்ட் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர், பேட்டராக விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும் டெல்லி அணி ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

The post ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர், பேட்டராக களமிறங்குவார்: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rishabh Pant ,IPL series ,BCCI ,Mumbai ,IPL ,Rishab Bund ,Dinakaran ,
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...