×

கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தில் நடவு பணியில் வெளிமாநில தொழிலாளர்

*ஒரு நாளைக்கு 5 ஏக்கர் நடவு செய்து அசத்தல்

கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நடவு பணியில் அசத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு 5 ஏக்கர் நடவு செய்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமம் விவசாயம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

நடவு பருவ காலங்களில் விவசாய நிலங்களில் நடவு பணிகளில் ஈடுபடுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்புக்கோவில் கிராமத்தில் வட மாநிலத்தை சேர்ந்த
ஆண், பெண் தொழிலாளிகள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காலையில் வயலில் இறங்கி மாலை வரை நடவு பணியில் செய்கின்றனர். ஒரு நளைக்கு 5 ஏக்கர் அளவிற்கு நடவு பணிகளை செய்வதால், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளை வியப்படைய செய்கிறது.

அந்த அளவிற்கு விவசாய நிலத்தில் இறங்கி நாற்று பறித்தல், நாற்று கட்டுக்களை தூக்குதல், நாற்று விலம்புதல், நாற்று நடவு நடுதல் போன்ற பணிகளை நாள் முழுவதும் செய்து வருகின்றனர்.
இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறும்போது, ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு ரூ.4,700 வாங்குகிறோம். சாப்பாட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுக்க வேண்டும் என்றனர்.

The post கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தில் நடவு பணியில் வெளிமாநில தொழிலாளர் appeared first on Dinakaran.

Tags : Ambuko ,Karambakudi ,Ambuco ,Pudukkottai District ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை