×

ஆந்திர மாநிலம் புலிவேந்துலாவில் ₹862 கோடியில் வளர்ச்சி பணிகள்

*முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்தார்

திருமலை : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தனது சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் ₹862 கோடியில் 10 வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், புலிவேந்துலாவில் ரூ.500 கோடியில் கட்டப்பட்ட டாக்டர் ஒய்எஸ்ஆர் அரசு (பொது) மருத்துவமனையை முதல்வர் ஜெகன் மோகன் நேற்று முதலில் திறந்து வைத்தார். அங்கு முன்னாள் முதல்வரும் அவரது தந்தையுமான ராஜசேகர ரெட்டி சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை மொத்தம் 51 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை விவரம் குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணபாபு முதல்வரிடம் விளக்கினார்.
அதன் பிறகு ரூ.20 கோடியில் கட்டப்பட்ட வாழை ஒருங்கிணைந்த பேக் ஹவுசை முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்து டாக்டர் ஒய்எஸ்ஆர் மினி செயலக வளாகத்தை திறந்து வைத்து, அங்கிருந்து டாக்டர் ஒய்எஸ்ஆர் ஜங்ஷன் சென்று ரூ.11 கோடியில் ஏற்படுத்தப்பட்ட சென்ட்ரல் போல் வார்டை தொடங்கி வைத்து ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜெயம்மா வணிக வளாகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், ரூ.80 லட்சத்தில் காந்தி ஜங்ஷன் பகுதியில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். அதன் பிறகு டாக்டர் ஒய்.எஸ்.ஆர். உலிமெல்லா ஏரி முகப்பை பார்வையிட்டு பூங்காவை ஆய்வு செய்தார்.ரூ.40 கோடியில் உருவாக்கப்பட்ட டாக்டர் ஒய்.எஸ்.ஆர் நினைவு பூங்காவை திறந்து வைத்து சிறிது நேரம் அங்கு இயற்கையை கண்டு ரசித்தார். அதன்பின் ரூ.175 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆதித்ய பிர்லா யூனிட்டை அடைந்து முதல்கட்ட பணிகள் திறப்பு விழாவில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கடப்பா எம்பி அவினாஷ், கலெக்டர் விஜயராமராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜெகன் மோகன் மீண்டும் புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை நோக்கி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே கடப்பா மற்றும் புலிவெந்துலாவில் தெலுங்கு தேசம் கட்சி – காங்கிரஸ் தேர்தல்களின் போது ஜெகனுக்கு எதிரான அரசியல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதால் தனது சொந்த மாவட்டம் மற்றும் தொகுதியில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

The post ஆந்திர மாநிலம் புலிவேந்துலாவில் ₹862 கோடியில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Tags : AP ,Bulivendula ,Jekhan Mohan ,Jeganmohan ,Kadapa district ,
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ரூ.529 கோடி...