சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2024) முகாம் அலுவலகத்தில், ” உதவுதல் நம் முதல் கடமை” என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பரிசுத் தொகைப்பினை பெற்றுக் கொண்ட இஸ்லாமியப் பெருமக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
The post இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.