×

வாய்க்கால் பகுதியில் சடலத்தை புதைக்கும் அவலம் மேலதிருக்கழிப்பாளை ஊராட்சியில் சுடுகாடு அமைக்க மக்கள் கோரிக்கை

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சுடுகாடு இல்லாததால் பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை பாசன வாய்க்கால் பகுதியில் சடலங்கலை புதைத்து வரும் கிராம மக்கள் இவற்றிற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாளை ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குறிப்பாக பட்டியலின மக்கள் மட்டும் 220 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடு வசதி இல்லாததால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் கரை பகுதிகளில், இந்த கிராமத்தில் இறக்கும் பட்டியலின மக்களின் சடலத்தை புதைத்து வருகின்றனர்.

மேலும் மழை காலங்களில் சடலத்தை கொண்டு செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியை சேர்ந்த கிராம மக்களின் நலன் கருதி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சுடுகாடு வசதி இல்லாததால் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வருகிறோம். பாசன வாய்க்கால் கரையோரத்தில் சடலத்தை அடக்கம் செய்து வருகிறோம். ஆகையால் எங்கள் கிராம மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து தர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

The post வாய்க்கால் பகுதியில் சடலத்தை புதைக்கும் அவலம் மேலதிருக்கழிப்பாளை ஊராட்சியில் சுடுகாடு அமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Melathirukazhipalla Panchayat ,Chidambaram ,Melathirukazhippalai panchayat ,Chidambaram, ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!