×

சிறுமிக்கு பாலியல் சீண்டல் முதியவர் அதிரடி கைது

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த கொடிகளம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் தியாகராஜன் (70). இவர் நேற்று அப்பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அழைத்துச்சென்று அவரது வீட்டின் பின்புறம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை உறவினர் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதைதையடுத்து தியாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் ஆவினங்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் சீண்டல் முதியவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Thiagakudi ,Thuraisamy ,Thiagarajan ,Pulianthoppu ,Vidhikalam ,Thikkakudi ,
× RELATED சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும்...