×

ரயில்வே நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ரூ.85,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

டெல்லி: ரூ.85,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள், 10 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வரையிலான மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

விஜயாத்தில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் சென்னையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். குஜராத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 10 வந்தே பாரத் ரயில் சேவைகள், மின்சார இழுவை, ரயில்வே பணிமனைகளை காணொலி காட்சி வாயிலாக தற்போது தொடங்கிவைக்கபட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இதுவரை மொத்தமாக 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வந்தேபாரத் ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, திருவனந்தபுரம், காசர்கோடு ஆகிய வழித்தடங்களிலும் தொடர்சியாக வந்தேபாரத் ரயில்கள் இயக்கபட்டுவருகிறன.

இந்த நிலையில், சிங்கபெருமால் கோயில், கங்கைகொண்டான், பட்டுக்கோட்டை, திருத்துறைபூண்டி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு 6 சரக்கு கிடங்குகள் தற்போது துவக்கிவைக்கபட்டுள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் என்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு 6.20 மணி நேரத்தில் பயணிக்களாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த வந்தே பாரத் ரயில் சேவை என்பது ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை பெங்களூரு வரை மட்டும் இயக்கபட்டு ஏப்ரல் 5-ம் தேதியில் இருந்து மைசூர் வரை செல்லும் என அறிவிக்கபட்டுள்ளது. வாரம்தேறும் புதன் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது என அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. மேலும் சென்னை – மைசூர் வந்தேபாரத், மங்களூர் – திருவன்ந்தபுரம் வந்தேபாரத், கொல்லம் -திருப்பதி விரைவு ரயில், ஆகிய ரயில்களையும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

The post ரயில்வே நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ரூ.85,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Chennai Central Railway Station ,Karnataka ,Mysore ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!