×

பழைய பைக்கை புதுப்பித்து இயக்கிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி, மார்ச் 12: பழைய பைக்கை புதுப்பித்து இயக்கி முதல்வர் நேற்று பார்வையிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இருசக்கர வாகன பிரியர். அவர் சொந்தமாக ஆர்.எக்ஸ் 100 என இருசக்கர வாகன வைத்துள்ளார். கல்லூரி படிப்பு காலம் முதலே இந்த பைக்கில் தான் வலம் வருவார். பின்னர் எம்எல்ஏவாகி வேளாண் துறை அமைச்சர், முதல்வர், எதிர்கட்சி தலைவராக இருந்த போதும், அவர் தனது இருசக்கர வாகனத்தில் தொகுதி உள்பட பல இடங்களுக்கு செல்வார். மேலும் பிறந்தநாளின் போதும், புத்தாண்டு தினத்திலும் தனது பைக்கிலேயே கோயிலுக்கு சென்று வழிபடுவார். அதேபோல் தேர்தல்களில் வாக்களிக்க செல்லும் போதும், வாக்கு சாவடிக்கு தனது பைக்கிலேயே செல்வார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முதல்வர் தனது பைக்கை பயன்படுத்தவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைக் புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட பைக்கை முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. புத்தம்புது பொலிவுடன் வந்து இறங்கிய தனது இருசக்கர வாகனத்தை முதல்வர் ரங்கசாமி தொட்டு பார்த்தார். உதைத்து ஸ்டார்ட் செய்தார். இந்த வீடியா தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

The post பழைய பைக்கை புதுப்பித்து இயக்கிய முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...