×

முத்துப்பேட்டையில் ரமலான் தொழுகை தொடங்கியது

 

முத்துப்பேட்டை, மார்ச் 12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நேற்று மாலை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்திற்கான ரமலான் பிறை தெரிந்ததையடுத்து ரமலான் நோன்பு தொடங்கியது. இதனையடுத்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நேற்றிரவு முதல் துவங்கியது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனால் நேற்றிரவு முதல் நாள் தொழுகை பள்ளிவாசல்களில் களைகட்டியது

 

The post முத்துப்பேட்டையில் ரமலான் தொழுகை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Ramadan ,Muthuppet ,Muthupet, Tiruvarur ,Muthupet ,
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து