×

திருவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டது

திருவில்லிபுத்தூர், மார்ச் 12: திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை யில் கடந்த ஒரு வாரமாக பக்தர்களையும் தெருவில் சுற்றி தெரியும் நாய்களையும் மற்றும் பொதுமக்களையும் கடிக்க வந்த இரண்டு குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது திருவண்ணாமலை இந்த திருவண்ணாமலை பகுதியில் உள்ள புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் சன்னதி உள்ளது. சன்னதிக்கு ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் கோயிலுக்கு வருபவர்களையும் தெருவில் சுற்றி தெரியும் நாய்களையும் எங்கிருந்தோ வந்த இரண்டு குரங்குகள் கடந்த ஒரு வார காலமாக விரட்டி விரட்டி கடிக்க வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவில்லிபுத்தூர் ரேஞ்சர் கார்த்திக் உத்தரவின் பெயரில் திருவில்லிபுத்தூர் வனத்துறையினர் திருவண்ணாமலை பகுதியில் குரங்குகளை பிடிக்க இரண்டு தினங்களாக கூண்டுகள் வைத்திருந்தனர். மேலும் அந்த கூண்டுக்குள் பலாப்பழங்களை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் பலாப்பழத்துக்கு ஆசைப்பட்டு இரண்டு குரங்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக கூண்டுக்குள் வந்து வசமாக மாட்டிக் கொண்டன. கூண்டில் சிக்கிய இரண்டு குரங்குகளையும் வனத்துறையினர் பிடித்து, திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கோவில் ஆறு அணை பகுதியில் கொண்டு போய் விட்டனர். இதன் பின்னரே திருவண்ணாமலை பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த வனத்துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post திருவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,Thiruvilliputhur ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...