- ஆம்
- தர்மபுரி
- பிஎஸ்என்எல்
- மாவட்டம்
- அம்மா மக்கல் முனேத்ர கஜகம்
- மாவட்ட சட்டமன்ற பேச்சாளர்
- முத்துசுவாமி
- மாவட்ட செயலாளர்
- டி.கே ராஜேந்திரன்
தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக, மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிப்காட் தொழிற்பேட்டையை விரைவாக அமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்பும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பாலு, ஏகநாதன், மணிமேகலை, பாஸ்கர், மகேந்திரவர்மன், கணேசன், குமார், ஞானம், பெரியசாமி, கோகுல்ராஜ், ரமேஷ்குமார், கிருஷ்ணன், ராமன், வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post அமமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.